சகாக்கள்..

ராஜா.. மற்றும் மயில்

ரெயின்போ கிரிக்கெட் கிளப்.! எங்கள் கிராமத்தின் டீம்., நடுநிலைப்பள்ளிபருவம் அது கிரிக்கெட் ஆர்வமிகுதியில் சீனியர்களுடன் திரிந்துகொண்டிருப்போம்..நுழைவுகட்டணம் செலுத்துபவரே கேப்டன் என ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவதால் வருடம் ஒரு கேப்டன் மாறினார்கள்...அப்பொழுதெல்லாம் கார்க்பால் மட்டுமே பிரசித்தம்.., எங்களிடம்
 பேட், பேடு, பந்து, மற்றும் கைவிரல்கள் அனைத்தும் தெரியும் "கீப்பிங் கிளவ்' எல்லாம் ஒற்றைபடையில் இருந்தன, மர்மஸ்தானத்தில் படாமலிருக்க பயண்படும் (abdomen guard )ஒருவரிடம் மட்டும் இருந்ததாக நினைவு...உடனடியாக லெவன்ஸ் தயார்செய்யும் பட்சத்தில் எங்களுக்கு வாய்பளிப்பார்கள் அதுமட்டுமல்லாமல் விளையாட்டு உபகரணங்கள் சுமந்துவருவதற்க்கும்.,!டீப் தேர்டுமேனாகவோ அல்லது சிலீப் ஆகவோ நிற்கவைப்பார்கள்..முதல்ஓவரை ( மணி) கில்லஸ்ப்பிதான் போடுவார் அதே ஸ்டைலில் ஓடிவருதால் நாங்கள் அப்படி அழைப்போம்..மிக லாவகமாக பந்தெரிவதில் கண்ணன் முன்னிலைபெறுவார், ஆரிப் பாய் ஆல்ரவுண்டராக கருதப்பட்டார், சில மேட்ச்களில் முதல் பந்திலேயே சிக்சர் விலாசுவார்  இளையராஜா அதுமட்டுமல்லாமல் 90% வெற்றி,தோல்வி நிர்ணயிப்பது இவரது விக்கெட் மட்டும்தான்.. எங்கள் அணியின் கங்குலி, (பிரகாஷ்) இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் இருந்தார்,செல்வம் "ப்ரிட்லீ" (ஓடிவருவதில்மட்டும்)என்றழைக்கப்பட்டார் அதிவேகமாக ஓடிவருவதால் "பாக்ஸ் நோ" போட்டுவிடுவார்,அப்படி பாக்ஸிற்குள் வைத்து போட்டால் விலகுபந்தாக மாறிவிடும் நிலையில் ஓவரை முடிப்பதற்குள் போதும் என்றாகிவிடும் இதனால்தான் அவரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை பாழாய் போய்விட்டதென்பது நியாமான உண்மை, ப்ரைஸ்எண்டர் மேட்ச்சில் பெரும்பாலும் தோற்றுவிடுவோம்.,ஆனால் "அத்திபூத்தாற்போல்" நாங்கள் பெறும் வெற்றி படு சுவாரஸ்யமானது ஆதலால் சுற்றுவட்டாரத்தில் எங்கள் அணிக்கு நல்ல பெயர் இருந்தது..

  பின்னாட்களில் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி கட்டாய ஓய்வு பெற்று விலகிவிட்டார்கள்

 அதன்பிறகு அணியின் முக்கியபதவிகள் எங்கள் வசம் வந்தன. ,"ராஜா"கேப்டனாக பொருப்பேற்றான் துனைகேப்டனாக கமல்,சரவணன் மாறி மாறி இருந்தார்கள், மற்றவர்கள் அணி வீரர்களாக பணியாற்றினோம் எங்கள் கிரிக்கெட் பயணமும் அதி அற்புதமானது.எங்களுடன் கெஸ்ட் ப்ளேயாராக அலெக்ஸ்,கார்த்திக் இருவரும் சேர்ந்துகொண்டனர் அலெக்ஸ் ஆல்ரவுண்டராக திகழ்ந்தான்,கார்த்திக் ஓப்பனர்.. கமல் பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் சிறப்பானவன்,ராஜா சுமாரகத்தான் ஆடுவான் கேப்டன் என்பதால் பொருட்படுத்துவதில்லை..,பச்சையப்பன்-Aliceமயில் (ஜாகிர்கான்)முதல்ஓவரை இவன்தான் வீசுவான் எக்ஸ்ட்ராஸ் போட்டாலும் போடுவான் பேட்ஸ்மேனை அடிக்கவிடமாட்டான்
ஆதலால் 5, 6,உதிரிகளை கொடுத்துவிட்டாலும் "தொடவிடவில்லை"என்ற கர்வமுன்டு அவனுக்கு, ட்ராவிட்டை பிரதி எடுத்தார்போல் ஆன் சைட் கிளான்ஸ் செய்வதில் சரவணன் கில்லாடி,சிவா யுவராஜை போன்றவன் ("பீல்டிங்கில்மட்டும்") மற்றபடி ஒன்றும் சோபிக்கவில்லை.ரகுநாத் அற்புதமாக கேட்ச் செய்யும் திறனுடையவன்,மணி(பெருமாள்) குருட்டாம்போக்காக இவன் மட்டைசுற்றுவதில் வல்லவன்.இவர்கள் இருவரும் மரணமாங்கா ஓவர்ஸ்டிக் பேர்வழி..கீர்த்தி(மெக்ரத்)  கனகச்சிதமாக அணியின் "தேனீர்சட்டை" அனிந்து வருவான் அவனுடைய பந்துவீச்சு அவனுக்கே புலப்படாத ஒன்று, விஜய் (பன்னு) ஓபி எனக்கூறப்படும் காலடியில் விழும் பந்தை கையால் எரிவதுபோல் துல்லியமாக நேர்திசையில் சிக்சர் விலாசுவான்..நான் இரண்டிலும் சுமார் ரகம்தான், (தன்னடக்கம் பாஸ்)..

இப்படியாக, ராஜா தலையில் ஒருசம்மரில் பல இடங்களில் பரிசு வென்றோம்.. மழைபேஞ்சு மேட்ச் நின்னுட்டா எதவச்சுனா வெற்றி,தோல்வி கொடுப்பார்கள் என்று பொடியன்கள் எங்களிடம் கேட்டால் சட்டென்று இடைமறித்து (duckworth lewis) முறை என்று கூறிவிட்டு நான் ஒரு சீனியர் என உறுதிபடுத்திவிட்டு நகரவார் இளையராஜா..ஆஸ்திரேலியரகள் பவுன்ஸர் அறிமுகபடுத்திய காலம் அது, அரைபிட்ச்சில் அழிந்திஎழுந்துவரும் பந்தை இரு ஷோல்டரையும் உயர்த்தி பந்தை கீப்பரிடம் விட்டுவிடுவார்கள்..டெஸ்ட்மேட்ச் பார்த்து கொண்டிருந்த சமயத்தில்..
தாங்கள் சிட்னியில் இருப்பதாக கருதி அடுத்த டோர்னமென்ட்டிலியே அந்த உத்தியை பயன்படுத்தினர் ரகுவும், மணியும் ஆனால் பந்தோ மிடில்ஸ்டிக்கை பதம் பாரத்தது..ஊழல் புரையோடி இருந்ததால் என்ட்ரன்ஸ் சிக்கல் வெகுவாக வரும்..அதிகமாக கமல் கட்டிவிடுவான் மற்றசமயங்களில் ஷேர் செய்துகொள்வோம்...மேற்குத்தெருவில் நாங்கள் வசித்தாலும்  மேட்ச் என்றால் மேட்டுதெருதான் எங்கள்  அசெம்பல் பாயண்ட்..

   ராஜாவும்,மயிலும்..

 பின்வரும்கதை இவர்களை பற்றியதுதான் "ராஜா"! தோற்றத்திலும் அப்படித்தான் இருப்பான். வீட்டிற்க்கு கடைகுட்டி என்பதால் செல்வாக்காக வளர்ந்தான் தரவரிசைபட்டியலில்(Rank card) "சுமார்" என்று குறிப்பிடும் அளவிற்க்கு படிப்பான் உறவுகளில் அத்தை மகன் என்பதால் பெருபாலும் ஒன்றாய் சுற்றுவோம்.அப்பொழுது 500ரூபாய் எல்லாம் எங்களுக்கு எட்டாகனி ஆனால் திடிறென்று அவன் பாக்கெட்டில் முளைக்கும்.. சட்டென்று Tvs Victor  கொண்டுவருவான் கேட்ரிங் படிப்பை முடித்துவிட்டு பாண்டிசேரியில் வேலைபார்த்தால் "சகலமும்"(தம்,சரக்கு) கற்றுதேர்ந்தான்..எனது சிகரெட் பழக்கத்தின் ஆஸ்தான குரு.

ஒருமுறை நானும் ராஜாவும் திருகணங்கூரில் என் அத்தைவீட்டிற்கு விஜயம் செய்தோம்,பார்த்துவிட்டு  தாவடிபட்டு வழியாக(மினிபஸ்ரூட்) அகரம் ஒயின்ஷாப்பை அடைந்தோம் ஆளுக்கொரு பீரை கவிழ்த்துவிட்டு புறப்பட்டோம்..
 கிராம புற சாலை என்பதால் குன்டும்,குழியுமாக காட்சியளிக்கும் புதிதாக வண்டிகிடைத்த குஷியிலும்,போதையிலும் இருந்ததில் வேகத்தை கூட்டினான் ராஜா. ஓர்மூலை வளைவில் குழியிலிருந்து காப்பாற்றுகிறேன் என்று தரையில் இரக்கிவிட முன்புற சக்கரத்தில் சிறியகல் ஒன்று இடரிவிட்டது அரசாங்க உதவிதொகையில் கட்டியவீட்டின் முன்புறம்  "ஒதுங்குவதற்காக" கீத்து தட்டியில் தற்காலிக கழிவரை அமைத்திருந்தனர் கட்டுபாட்டை இழந்த எங்கள் வாகனம் அந்த தட்டியைவீழ்த்தி,தண்ணீர் நிரப்பிவைத்திருத்து புலு கலர் பேரலை வென்று, அன்றுகாலை போடப்பட்டிருந்த கோலத்தை அவர்கள் அழித்ததுபோக மிச்சத்தை முற்றிலுமாக விழுந்து அழித்துவிட்டோம்..முன்புற திண்னையில் தட்டுடன் சாப்பிட்டுகொண்டிருந்த சிறுமி எங்கள் கோரவிபத்தை கண்டவுடன் வாரிசுருட்டிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்..
சட்டென்று சுதாரித்துகொண்டு இருவரும் எழுந்து சரியாக "சிராய்த்துள்ளதா" என்று ஒரு முறை சோதித்துவிட்டு வண்டி தூக்கி நிறுத்தினோம்.. புட்ரெஸ்டர் சயின்கவருடன் ஒட்டிருந்த்து,இடதுபக்க இன்டிக்கேட்டர் தற்கொலையில் ஈடுபட்டதுபோல் தொங்கியது,உங்களைவிட எனக்குத்தான் சிறாய்ப்பு அதிகம் என்று முன்புறதகடு கூறியது..மெல்ல சாலைக்கு நகர்த்தி வந்தோம் ராஜா இரண்டுமுறை கிக் செய்ததும் உயிர்பெற்றுவிட்டது.. பின்பு போக்குவரத்து விதிமுறை பலகையே இல்லாத அந்த சாலையிலும்  விதிமுறையை பின்பற்றி வீடுவந்து சேர்தோம்..,
 அடுத்தநாள் காலையில் பெட்டிகடையில் சிகரட் வாங்கிகொண்டு கக்கா போவதற்கு ஏரிக்கு சென்றோம் வழிநெடுக பேசி சிரித்துகொண்டே போனாம்..ராஜா சற்று முன்கோபி எளிதில் சண்டையில் இறங்கி விடுவான் மயிலும் அப்படித்தான்..ஆனால் நாசூக்காக்கலாய்த்துவிட்டு நகர்ந்துவிடுவான் தான் எடுத்த முடிவுகளில் தீர்கமானவர்கள் இருவரும் பின்வாங்கமாட்டார்கள்..அசாத்தியாமான அதிர்ச்சியில் ஆழ்த்துவான் ராஜா குளத்துமேட்டில் நடந்த மேட்ச்சில் திடிரென்று இடதுகையில் பேட்டிங் இறங்கி சிக்சர் அடித்ததாகட்டும், வீட்டில் கோவித்துகொண்டு அவன் சித்திவீட்டில் இருக்கும்பொழுது முன்அனுபவமில்லாமல் ஆட்டோ ஓட்டியதாகட்டும் தன்னம்பிக்கை மிக்கவன் ஆனால் இவ்வளவு உறுதியானவன் ஏதோ ஓர் பின்னிறவில் தன்னை மாய்த்துக்கொண்டான்.. மயில் ஒருவருடம் வெளிநாட்டில் இருந்தான் ,கிராமத்திற்க்கு திரும்பிய பின்பும் நன்றாகதான் இருந்தான் சிறிது நாட்கள் கழித்து விசாரிக்கையில் "மனபிறழ்வு" ஏற்பட்டவிட்டதாகவும் யாருடனும் பேசுவமில்லை என்றும் அறிந்தோம் பெட்டிகடையில் சிகரெட் வாங்கும்பொழுது ஒருமுறை வந்தான் ஆனால் பேசமறுத்துவிட்டான்.. எங்கள் அணியில் முதலில் தனக்கென்று ஒரு பேட் வாங்கியவன்.இவன்தான்.. இதைநான் இங்கு எழுதுவதற்கு காரணம் சற்றுமுன்பு சென்றவருடம் கடந்துவிட்ட கோடைவிடுமுறையில் ஒரு டோர்னமென்டில் முதல் பரிசு வென்றோம் வெற்றிகளிப்பில் வீடு திரும்புகையில் சட்டென இருவரும் நினைவில் தப்பினர்.!

 கிரிக்கெட்டை தாண்டி எங்களிடத்தில் நல்ல நட்பு இருந்தது சில முறை கருத்து வேறுபட்டாலும் சட்டை பிடித்துக்கொள்ளுமளவிற்கு சன்டையிட்ட்தில்லை..அரிதாக நடந்தாலும் ஓரிரு நாட்களில் பேசி சிரித்துவிடுவோம்..

வாழ்க்கை என்பது அவரவர் பக்க ஞாயமெனில்? இவர்கள் பக்க ஞாயங்களுக்கு காலம் செவிமடுக்கவில்லை.!

சுருங்கசொல்வதென்றால்..
ஒரு தலைசிறந்த கவிதையின் அழகான முதல் இரண்டு வரிகளை அழித்துவிட்டது காலம்..!

           நினைவில்..!
ரெயின்போ கிரிக்கெட் கிளப்.

Comments

Popular posts from this blog

உறையும் உதிரங்கள்

புலம்பல்கள்