உறையும் உதிரங்கள்

உறையும் உதிரங்கள்
# AB -




Oct 4,

4:56:27,28,29..am
.
...
......

"முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே.... பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்..

எஃப்எம் ரெயின்போவின் இரவு கீதம் நிகழ்ச்சியின் இறுதிபாடல் கேட்பாரற்று ஒளித்துகொண்டிருந்தது..

அபூர்வன் காரை நியுட்ரல் செய்து சன்னமாக காம்பவுண்ட் அருகில் நிறுத்தினான்..
மார்பளவு மட்டுமே இருந்த மதில்சுவரை ஓரே ஜம்ப்"ல் தாவிகுதித்தான்..


திடீரெ'ன்ற சத்தத்தை உணர்ந்த செக்யூரிட்டி வழிந்த எச்சிலை துடைத்தவாறு சுற்றிலும் பார்த்தான்..தூக்ககலக்கத்தில் நிதானம் தட்டவில்லை, பெரியதாக ஒரு சோம்பல்முறித்துவிட்டு சட்டைபையிலிருந்த பீடி கட்டில் ஒன்றை உருவி முனையை லேசாக நசுக்கி பற்றவைத்தான்..

அபூர்வன் சத்தமில்லாமல் நழுவி சாளரத்தி்ன் அருகில் சென்று உள்ளே பார்வையை செலுத்தினான்..

ஹாலின் வலதுபுறத்தில் ரோஸி சலனமில்லாமல் உறங்கத்தில் ஆழ்ந்திருந்தாள்..

ஜன்னலின் கண்ணாடி கதவை திறந்து உள்புறம் தாழிட்டிருந்த கதவின் 'லாக்கை சற்று சிரமத்துடன் ஸ்க்ரூட்ரைவரை வைத்து ஒரு நெம்பு நெம்பினான், டக் என்ற இரைச்சலுடன் தாழ் தன்னை விடுவித்தது..


மெல்ல கதவைதிறந்து ஊடுருவி ரோஸியின் அருகில் சென்று, தனது பேண்ட் பைக்குள்ளிருந்து ஒருவித திரவபாக்கெட்டை வெளியே எடுத்து சிரஞ்சில் ஏற்றினான்..

முன்தயாரிப்பில் வைத்திருந்த குளோரோஃபார்மை அவள் நாசியருகில் வைத்து ப்ரஸ் செய்தான்..அழற்சியாக உணர்ந்த ரோஸி லேசாக எழுந்த கனமே குளோரோஃபார்மை உள்ளிழுத்து மயக்கத்தில் விழுந்துவிட்டாள்..
.
..
....
......
Oct. 5, 23:47 PM

ஹலோ, சார் வெஸ்ட் தாம்பரம் செகண்ட அவென்யு.. 22/1

OK.. I'll will be there in two minutes..


காதர் போனை கட் செய்தான், எத்தனை மணிக்கு உங்க புருஷன் வீட்டுக்கு வந்து சேந்தாரு..?


நைட்டு எட்டேமுக்காலுக்குலாம் வந்துட்டாருங்க, நல்லதாங்க சாப்ட்டு தூங்கபோனாரு..
வாயில் துனியை பொத்திக்கொண்டு காதர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அழுதுகொண்டே பதில் கூறினார் ராமின் மனைவி..

ஜீப் இரண்டாவது நிழற்சாலையில் வேகத்தை குறைத்தபடி உள்நுழைந்து நின்றது..

ராக்கி பதற்றத்துடன் இறங்கி இரண்டு படிகளை உதாசினபடுத்தி மூன்றாவது படியில் தாவி சுருசுருப்பாக வராண்டாவை
அடைந்தான்..

இன்ஸ்பெக்டர் வந்துட்டாரு அவர்கிட்ட நடந்த்த ஒரு வாட்டி சொல்லுமா என்று காதர் கூறினான்..

சளியை முந்தானையால் சிந்தியபடி..
சார்,
நாங்க ப்ரைவேட் ப்ளட்பேங்க் வச்சிருக்கோம்..இங்க தாம்பரத்துலதான் இருக்கு எங்க ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவர்,
நேத்து நைட் நல்லாதான் வந்தாரு,

அவர் ரூமுக்குள்ள
என்னமோ சத்தம்கேட்டமாதிரி இருந்துச்சு உள்ள போய் பாத்தா..

இப்டி
இந்த நெலையில இருப்பார்னு நான் நெனைக்கல சார்.. விசும்பலுடன் தொடர்ந்தாள், இதுக்கு காரணமானவங்கள கண்டிபா நீங்க புடிக்கனும்..

கவலைபடாதிங்க கண்டுப்பா நாங்க புடிச்சிருவும்..

By the way உங்க பேரென்ன..?

சாந்தலக்‌ஷ்மி சார்.

உங்களுக்கு கல்யாணமாகி எவ்ளோ நாள் ஆகுது..?

7 வருஷம் சார்.. கொழந்தை எதுவும் இல்லையா..?

இல்ல சார், ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்ருக்கோம்..

OK.

காதர்..

சொல்லுங்க சார்..

பாடிய போஸ்ட்மார்டத்துக்கு ஏற்பாடு பன்னிருங்க, இவங்கள இங்கயே ஸ்டே பன்ன சொல்லுங்க, குறிப்பா வெளியூர் எங்கேயும் போக வேணாம்னு சொல்லுங்க..என்க்கொய்ரிக்கு இவங்க உதவி வேணும்..!

ஓகே சார்..

ம்ம்ம்... காதர்..

இதப்பத்தி நீங்க என்ன நெனைக்கறிங்க..?

இரத்தத்த
யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சனமாதிரி இருக்கு சார், ஒரு சொட்டு விடாம எடுத்துருக்காங்க..

உடம்புல உறிஞ்சினதுக்கான அடையாளம் இருக்கா..?

இருக்கு சார்.. வலதுகை மனிக்கட்டுல ரெண்டு ரத்தக்குழாய கட்ட பன்னி கடைசி சொட்டு ரத்தம்வரை எடுத்துருக்காங்க..

பேசிக்கொண்டிருக்கும்பொழுதே ராக்கியின் வாக்கிடாக்கி இரைந்த்து..

தாம்பரம் S3 station common the line control..!

S3 இன்ஸ்பெக்டர் ராக்கி.. கண்ட்ரோல்,.


கவர்மெண்ட் ஹாஸ்ப்பிட்டல் கோட்ரஸ்ல ஒரு லேடி நர்ஸ் மர்டர் நடந்திருக்கு.. கண்ட்ரோல்

இஸிட்..?

Yes ,

information forwarded success control.

ராக்கி தன் கைபேசியில் ஸ்டேஷனை தொடர்புகொண்டான்..

,கான்ஸ்டபிள் நாரயணன் தாம்பரம் ஜி ஹெச் க்கு உடனே போங்க..
மீடியா வரதுக்குள்ள நீங்க போய் ரிப்போர்ட் ரெடி பன்னுங்க..நான் உடனே அங்க வரன்.!
.
.
...
.......
.........

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை,
தாம்பரம்.


" ரோஸி வெறுமன சுவரை பார்த்தபடி ஒருவாறு அஷ்டகோணலாக கிடந்தாள்..
சாக்பீஸ்சால் உடலை சுற்றி கோடு வரைந்திருந்தார்கள்.."

நாரயணன் என்ன நடந்தது..?

பெயர் ரோஸி, வயது 39
இரத்த சேகரிப்பு பிரிவு..

செகண்ட்ஷிப்ட் முடிச்சிட்டு நைட் 2 மணிக்குதான் வந்திருகாங்க சார், அசதியில அப்டியே படுத்துட்டாங்கனு நெனைக்கறன்..ஷாக்ஸ்க்கூட கழட்டல..

காலையில ஷப்ட் மாறவந்த செக்யூரிட்டிதான் மொதல்ல பாத்துருக்கார்..

கலவரமுகத்துடன் அருகில் வந்தான் முருகேசன்..

என்னயா பாத்த..?

சீஃப் டாக்டர் அவசரமா கூட்டியார சொன்னாருங்க, வந்து பாத்தா இந்தம்மா பொணமா கெடந்துச்சிங்க..

சரி, டாக்டர் எங்க..?

ஜெனரல்வார்டுக்கு ரவுண்ட்ஸ் போயிருக்காருங்க..

நாரயணன், நைட் ஷிப்ட் இருந்த செக்யூரிட்டி வீட்டு அட்ரஸ் கேட்டு அவர விசாரிங்க..

ஓகே சார்...
.
..
ஹலோ டாக்டர், ஐ யம் ராக்கி..

ஹலோ ஐயம் ஷாம்..

டாக்டர் இந்த மர்டர் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா..?

அக்யூட் ஹெமொலிடுக் ரியாக்‌ஷன்..ஹாட் ரேட் ஜாஸ்தியாகி இறந்திருக்காங்க..
கொலைகாரன் குளோரோஃபார்மை யூஸ் பன்னிருக்கான்..

புரியல டாக்டர்..?

சிம்பிள்.! ரத்தத்தை மாத்தி கொடுத்திருக்கான்.

டாகடர், தப்பா எடுத்துக்காதிங்க ரோஸியோட பர்சனல் எதாவது தெரியுமா..?

சொந்த ஊர் காஞ்சிபுரம்,
ரொம்ப செலவு பன்னிதான் இந்த வேளையில சேர்ந்தாங்க..
அவரோட ஹஸ்பண்ட் எதோ சிட்பண்ட் நடத்துறார்..ஒரு பையனு நெனைக்குறன்..
தட்ஸ்ஆல்.

டேங்க்யூ டாக்டர்..

இட்ஸ்சால் ரைட்.

முற்றிலுமாக குழப்பத்திற்க்குள்ளாகி
மருத்தவனையின் எதிர்பற டீக்கடைக்கு வந்தான் ராக்கி..

ஒரு டீ ..

எவ்வித மாற்றமுமில்லமால் நகரவாசிகள் வழக்கமான பொருளாதாரதேடலுக்கு விரைந்தார்கள்..

டீயை குடித்துவிட்டு சிகரெட்டை புகைத்தபடி யோசனையில் விழந்தான் ராக்கி..

முன்புறம் அமர்ந்திருந்தவன் அன்றைய தினசரியை புரட்ட..

" கொட்டிகிடக்கும் பணம் வந்து குத்துசுரை நிறுத்தாது,

குருதி கொடுக்கும் குணமிருந்தால் இந்த பூமி என்றும் நிக்காது.."

இரண்டுநாள் கழித்து நடக்கவிருக்கும் இரத்ததான விழுப்புணர்வுப்பேரனியின்
வாசகம் கண்ணில் பட்டது..

சட்டென்று பொறி தட்டியவனாய்
மருத்துவமனையின் உள் நுழைந்து இரத்ததான பிரிவை அடைந்தான்..

நர்ஸிடம் ரெஜிஸ்டரை வாங்கி வேகமாக புரட்டினான்..

என்ன தேடிறிங்க..? கேள்வியில் பயம் இருந்தது..

இந்த ஹாஸ்பிட்டல்ல சமீபத்துல
இரத்தம்கிடைக்காம இறந்தபோனவங்களோட பட்டியல் உடனே எனக்கு வேணும்..

இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு 7 மணி நேரம் போராடியும்
AB ,நெகடிவ் ரத்தம் கெடைக்காம இறந்துடுச்சு..

அவங்க பேர்..?

எமெர்ஜென்ஸி வார்ட் ரெஜிஸ்டர்ல இருக்கும்.. அங்க போய் பாருங்க..

ரெஜிஸ்டரை புரட்டுவதற்க்கு அவசியமில்லாமல் முதல் பக்கத்தின் கடைசியில் இருந்தது..

பேஷன்ட் நேம். - பூவிழி


பேஷன்ட் ரிலேஷன் நேம்.. - அபூர்வன்..!!!
.
.
.
.
...
பல்லாவரம் மேன்ஷன்.
.
.

" கண்கள் நோக்கினோம்..
பல கதைகள் அளந்தோம்..!

காதல் ஆற்றினோம்..
பல கவிதைகளையும் வார்த்தோம்..!!

ஊடலால் தொலைவோம், அதனாலென்ன பின்பு கூடலில் தேடுவோம்.!!

பிரிவொன்று நேர்ந்தால் மட்டும்,
பிரிவாதிருப்போம்..!!!"

ஆம், நாம் ஈருடல் ஓருயிர்.!


கண்ணீர்துளிகள் வழிந்தபடி பூவிழியின் கவிதையை வாசித்தான் அபூர்வன்..

வெறும் பணத்திற்காக குருதி மறுத்தவர்களை பழிதீர்த்துவிட்டேன்..என்
பூவிழியை பறித்தவர்களை நான் உதிர்த்துவிட்டேன்..!!வேலை முடிந்தது

இதோ செல்கிறேன்..


அறைமுழுவதும் நிசப்தம்.. கண்களை அழுந்த துடைத்து கொண்டான், அறைமுழுவதையும் சுத்தம் செய்தான்.. குளித்துமுடித்து அவளுக்கு பிடித்த சந்தனகலர் சட்டை அனிந்தான்..

துப்பட்டாவை விசிறியில் வீசி முடிவைத்தான்.. சில நிமிடம் மெளனமாக இருந்தான்..

தன் உயிரை மாய்க்கபோகும் அந்த மின்விசிறியை பார்த்து ஏளனமாக நகைத்தான்..

எதிர்பாராதவிதமாக கைபேசி குறுக்கிட்டது..
துளிபதட்டமுமில்லாமல் நிதானமாக ஆன் செய்தான்..

யாரு,

நான் இன்ஸ்பெக்டர் ராக்கி..

நீதான அபூர்வன், இன்னைக்கு தாம்பரத்துல நடந்த இரட்டைக்கொலை சம்பந்தமா உன்ன விசாரிக்கனும்....
.
.
அக்டோபர் 2 ந்தேதி செய்திதாளில் 7வது பக்கத்தை பாருங்க.. முன்னறிவிப்பின்றி போனை கட் செய்து செயலிழக்கச்செய்தான்..

அவசர அவசரமாக ரெண்டாம் தேதி நியுஸ்ப்பேப்ரை தேடிபுரட்டினான்.. ராக்கி

பக்கம் என் 7
.
.
" சோழிங்க நல்லூர் நான்குமுனை சந்தப்பில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது, எதிர்பாராத இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயனித்த யுவதிக்கு பலத்த காயம் " தாம்பரம் இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்
கிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்..


( முற்றும் )

Comments

Popular posts from this blog

புலம்பல்கள்

சகாக்கள்..