Posts

தலைப்பு வைக்கல

தலைப்பு வைக்கல... . . . ஓய்வறியா பொழுதுகளில் என் தலையேந்தும் மடியைத்தான் தேடுகின்றேன்..வாழ்வின் துன்பங்களையெல்லாம் ஒருசேர திரட்டி என் தோலின்மீது வைத்துவிடு, பாலைவனத்தை கடப்பதொன்றும் காற்றிற்க்கு அத்தனை சிரமமில்லை..மலைமுகடுகளில் வழியும் பேரருவிகளுக்கு பாறையைத்தொடும் வரை தற்க்கொலை பயணம்தான்.. சிதறிக்கிடக்கும் சந்தோஷத்தை மட்டும் இருவரும் சேர்ந்தே பொருக்குவோம் வா!, செயற்க்கை இறகைப்பொருத்தி பறப்பதில் அத்தனை சுதந்திரம் இருக்கபோவதில்லை..அனுபவங்களில்  நீச்சில் பழகி வாழ்வின் பேராற்றங்கரையை அடைந்துவிடலாம்.. ஓசையில்லாமல் உன் பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கும் இருதய துடிப்புகள் ஓய்வைத்தேடும்போது எனை மடியேந்திவிடு..! கண்கள் கசியாதே இதையும் பாழாய்போன காதலில் சேர்த்துவிடுவார்கள்..!!

புனிதம்..

தாய்க்கும், சேய்க்கும் உள்ள பிணைப்பைப்பற்றி எழுதுவதில்.. வைரமுத்துவின் கவிதைகள் நம்மை ஆச்சர்யத்தில் நிறுத்தும்..! " உன் நகம் கீற வீங்குதென்மார்பு" என்பதில் தொடங்கி "மார்பில் ஊறும் உயிரே" என தாயின் உயிர்பருகும் மழலையின்அழகை அற்புதமாக எழுதியிருப்பார்.. "முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால் ஒரு வெண்பாவை செய்வேன் கண்ணே" "இதழெச்சில் நீர் எனும் தீர்த்தத்தால் அதில் திருத்தங்கள் நீ செய்வாய் கண்ணே" இது தாமரையின் தமிழ்.! எந்த ஒன்றையும் புனிதபடுத்துவது அதன் இயல்பை கெடுக்கும் செயல்தான்..ஆனால் இயல்பான ஒன்று அழகாக நிகழும்பொழுது அது புனிதமாகிபோகிறது..! தமிழுக்கு "ழ"கரம் எப்படியோ.. தாய்க்கு "சேயும்" அப்படியே..!!

புலம்பல்கள்

சில எழுத்துக்கள் உரைத்துவிடும் பல நூறு அர்த்தங்களை..!! ஓராயிரம் புறக்கணித்தல் இருந்தாலென்ன அதோ ஓர் மல்லிக்கை மொட்டு துளிர்க்கிறது..! விலக்குதல் ஒழுங்கீனம், விலகுதல் ஒழுக்கம்..! விழியற்றவளின் கையில் விலைமதிப்பற்ற ஓவியம்..! பிறந்த குழந்தையின் பாதங்களின் தூய்மை எவர் மனதில் காணக்கூடும்..? இசைத்தமிழை அறியாதவர்களுக்கு மழலையின் முனங்கல்கள் தேசியகீதம்..! உதாசினப்படுத்தியது போதும் ஒரு முறை கண்ணாடியை பார்த்துக்கொள்ளுங்கள்..!

உறையும் உதிரங்கள்

உறையும் உதிரங்கள் # AB - Oct 4, 4:56:27,28,29..am . ... ...... "முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே.... பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்.. எஃப்எம் ரெயின்போவின் இரவு கீதம் நிகழ்ச்சியின் இறுதிபாடல் கேட்பாரற்று ஒளித்துகொண்டிருந்தது.. அபூர்வன் காரை நியுட்ரல் செய்து சன்னமாக காம்பவுண்ட் அருகில் நிறுத்தினான்.. மார்பளவு மட்டுமே இருந்த மதில்சுவரை ஓரே ஜம்ப்"ல் தாவிகுதித்தான்.. திடீரெ'ன்ற சத்தத்தை உணர்ந்த செக்யூரிட்டி வழிந்த எச்சிலை துடைத்தவாறு சுற்றிலும் பார்த்தான்..தூக்ககலக்கத்தில் நிதானம் தட்டவில்லை, பெரியதாக ஒரு சோம்பல்முறித்துவிட்டு சட்டைபையிலிருந்த பீடி கட்டில் ஒன்றை உருவி முனையை லேசாக நசுக்கி பற்றவைத்தான்.. அபூர்வன் சத்தமில்லாமல் நழுவி சாளரத்தி்ன் அருகில் சென்று உள்ளே பார்வையை செலுத்தினான்.. ஹாலின் வலதுபுறத்தில் ரோஸி சலனமில்லாமல் உறங்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.. ஜன்னலின் கண்ணாடி கதவை திறந்து உள்புறம் தாழிட்டிருந்த கதவின் 'லாக்கை சற்று சிரமத்துடன் ஸ்க்ரூட்ரைவரை...

கிறுக்கல்கள்..!

சில நூறு அர்த்தங்களை உரைத்துவிடும் ஓரிரு எழுத்துக்கள்..! விழியற்றவளின் கையில் விலைமதிப்பற்ற ஓவியம்.! மழலையின் சினுங்கல் கூறிவிடும் இதுவரைக்கேட்டிறாத இசைத்தமிழை..! ஓராயிரம் புறக்கணித்தல்இருப்பினுமென்ன உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது இந்த ஒற்றை ரோஜா..! ஓர் இலக்கியத்தின் கையில் தமிழ்.., ஆம் கைக்குழந்தையின் கைப்பிடித்தவாறு சேய்..! இதுவரை இரண்டு உலக யுத்தம் நடந்த்து போதும் இத்துடன் முறித்துக்கொள்வோம் நம் காதலை...!

சகாக்கள்..

Image
ராஜா.. மற்றும் மயில் ரெயின்போ கிரிக்கெட் கிளப்.! எங்கள் கிராமத்தின் டீம்., நடுநிலைப்பள்ளிபருவம் அது கிரிக்கெட் ஆர்வமிகுதியில் சீனியர்களுடன் திரிந்துகொண்டிருப்போம்..நுழைவுகட்டணம் செலுத்துபவரே கேப்டன் என ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவதால் வருடம் ஒரு கேப்டன் மாறினார்கள்...அப்பொழுதெல்லாம் கார்க்பால் மட்டுமே பிரசித்தம்.., எங்களிடம்  பேட், பேடு, பந்து, மற்றும் கைவிரல்கள் அனைத்தும் தெரியும் "கீப்பிங் கிளவ்' எல்லாம் ஒற்றைபடையில் இருந்தன, மர்மஸ்தானத்தில் படாமலிருக்க பயண்படும் (abdomen guard )ஒருவரிடம் மட்டும் இருந்ததாக நினைவு...உடனடியாக லெவன்ஸ் தயார்செய்யும் பட்சத்தில் எங்களுக்கு வாய்பளிப்பார்கள் அதுமட்டுமல்லாமல் விளையாட்டு உபகரணங்கள் சுமந்துவருவதற்க்கும்.,!டீப் தேர்டுமேனாகவோ அல்லது சிலீப் ஆகவோ நிற்கவைப்பார்கள்..முதல்ஓவரை ( மணி) கில்லஸ்ப்பிதான் போடுவார் அதே ஸ்டைலில் ஓடிவருதால் நாங்கள் அப்படி அழைப்போம்..மிக லாவகமாக பந்தெரிவதில் கண்ணன் முன்னிலைபெறுவார், ஆரிப் பாய் ஆல்ரவுண்டராக கருதப்பட்டார், சில மேட்ச்களில் முதல் பந்திலேயே சிக்சர் விலாசுவார்  இளையராஜா அதுமட்டுமல்லாமல் 90% வெற்றி,தோல்வி ந...