Posts

Showing posts from October, 2017

உறையும் உதிரங்கள்

உறையும் உதிரங்கள் # AB - Oct 4, 4:56:27,28,29..am . ... ...... "முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே.... பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்.. எஃப்எம் ரெயின்போவின் இரவு கீதம் நிகழ்ச்சியின் இறுதிபாடல் கேட்பாரற்று ஒளித்துகொண்டிருந்தது.. அபூர்வன் காரை நியுட்ரல் செய்து சன்னமாக காம்பவுண்ட் அருகில் நிறுத்தினான்.. மார்பளவு மட்டுமே இருந்த மதில்சுவரை ஓரே ஜம்ப்"ல் தாவிகுதித்தான்.. திடீரெ'ன்ற சத்தத்தை உணர்ந்த செக்யூரிட்டி வழிந்த எச்சிலை துடைத்தவாறு சுற்றிலும் பார்த்தான்..தூக்ககலக்கத்தில் நிதானம் தட்டவில்லை, பெரியதாக ஒரு சோம்பல்முறித்துவிட்டு சட்டைபையிலிருந்த பீடி கட்டில் ஒன்றை உருவி முனையை லேசாக நசுக்கி பற்றவைத்தான்.. அபூர்வன் சத்தமில்லாமல் நழுவி சாளரத்தி்ன் அருகில் சென்று உள்ளே பார்வையை செலுத்தினான்.. ஹாலின் வலதுபுறத்தில் ரோஸி சலனமில்லாமல் உறங்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.. ஜன்னலின் கண்ணாடி கதவை திறந்து உள்புறம் தாழிட்டிருந்த கதவின் 'லாக்கை சற்று சிரமத்துடன் ஸ்க்ரூட்ரைவரை...