ராஜா.. மற்றும் மயில் ரெயின்போ கிரிக்கெட் கிளப்.! எங்கள் கிராமத்தின் டீம்., நடுநிலைப்பள்ளிபருவம் அது கிரிக்கெட் ஆர்வமிகுதியில் சீனியர்களுடன் திரிந்துகொண்டிருப்போம்..நுழைவுகட்டணம் செலுத்துபவரே கேப்டன் என ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவதால் வருடம் ஒரு கேப்டன் மாறினார்கள்...அப்பொழுதெல்லாம் கார்க்பால் மட்டுமே பிரசித்தம்.., எங்களிடம் பேட், பேடு, பந்து, மற்றும் கைவிரல்கள் அனைத்தும் தெரியும் "கீப்பிங் கிளவ்' எல்லாம் ஒற்றைபடையில் இருந்தன, மர்மஸ்தானத்தில் படாமலிருக்க பயண்படும் (abdomen guard )ஒருவரிடம் மட்டும் இருந்ததாக நினைவு...உடனடியாக லெவன்ஸ் தயார்செய்யும் பட்சத்தில் எங்களுக்கு வாய்பளிப்பார்கள் அதுமட்டுமல்லாமல் விளையாட்டு உபகரணங்கள் சுமந்துவருவதற்க்கும்.,!டீப் தேர்டுமேனாகவோ அல்லது சிலீப் ஆகவோ நிற்கவைப்பார்கள்..முதல்ஓவரை ( மணி) கில்லஸ்ப்பிதான் போடுவார் அதே ஸ்டைலில் ஓடிவருதால் நாங்கள் அப்படி அழைப்போம்..மிக லாவகமாக பந்தெரிவதில் கண்ணன் முன்னிலைபெறுவார், ஆரிப் பாய் ஆல்ரவுண்டராக கருதப்பட்டார், சில மேட்ச்களில் முதல் பந்திலேயே சிக்சர் விலாசுவார் இளையராஜா அதுமட்டுமல்லாமல் 90% வெற்றி,தோல்வி ந...